குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், மோடி அரசாங்கத்தின் தோல்விகளையும் எதிர்த்து பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிரிட்டனில் வாழும் அஸ்ஸாமிகள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்தவாறு, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறுங்கள் என்ற பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள தலைநகரங்களில் பாரத் பாச்சாவ் ( இந்தியாவை காப்பாற்றுங்கள்) என்ற பேரணியை ஏற்பாடு செய்து நடத்தினர். அதன்படி லண்டனில் நடந்த பேரணியில் பங்கு பெற்றவர்கள், பாஜக அரசு பெண்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் இருக்கிறது என்றும்; சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.