Turkey Offensive வடகிழக்கு சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்வதாக அந்நாட்டு அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கிப் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு பெரும் உதவியாக இருந்த குர்து பேராளிகளை, பயங்கரவாதிகள் என துருக்கி அரசு கருவதுவதே இந்த தாக்குதலுக்கான காரணமாக இருக்கிறது. இந்த மோதலில் தற்போதுவரை 399 குர்து பயங்கரவாதிகளைக் கொன்றுவிட்டோம் என்று துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.