தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'லேன்டரோவரில் ஊர்வலம்' - இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்

இளவரசர் பிலிப்பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புனித ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Prince Philip
இளவரசர் பிலிப்

By

Published : Apr 18, 2021, 9:15 AM IST

இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் தனது 99ஆவது வயதில், கடந்த 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரரான பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.

வின்சர் கோட்டையில் இளவரசருக்கு மரியாதை

வின்சர் கோட்டையிலிருந்த லேன்டரோவர் காரில் இளவரசர் பிலிப்பின் உடல், ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேவாலயத்தில் பிரார்த்தனை, இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்

தொடர்ந்து, இளவரசர் பிலிப்பின் உடல், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் ஆயுதப்படையினர் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆனால், கரோனா கட்டுப்பாடு காரணமாகப் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் 30 பேர் மட்டும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

லேன்டரோவரில் இளவரசர் பிலிப்பின் உடல்

பிரிட்டன், கிப்ரால்டர் உள்பட ஒன்பது இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஒரு நிமிட தேசிய மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ஆறு நிமிடங்களுக்கு விமானங்கள் பறக்கவும், தரையிறங்கவும் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குண்டுகள் முழங்க மரியாதை

இதையும் படிங்க:கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது

ABOUT THE AUTHOR

...view details