இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த மார்ச் அறிவித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார்.
அப்போதே பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரிட்டனிலுள்ள ஃபிராக்மோர் இருப்பிடத்தை (Frogmore Cottage) புதுப்பிக்க ஆன செலவை இளவரசர் ஹாரியும் மேகனும் திருப்பித் தர விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஹாரி-மேகன் தம்பதி ஃபிராக்மோர் இருப்பிடத்தைப் புதுப்பிக்க ஆன செலவை திரும்பச் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஹாரி-மேகன் தம்பதி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "அரசு குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சவர்ன் கிராண்ட் (Sovereign Grant) தொகையிலிருந்து புதுப்பிக்கப்பட்டதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது.