தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனா பீதி: இந்தியர்கள் பாணியல் வணக்கம் வைத்த பிரிட்டன் இளவரசர்! - கொரோனா வைரஸ் அண்மை செய்திகள்

லண்டன் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்தியர்கள் பாணியல் விருந்தினர்களை கை கூப்பி வரவேற்றார்.

prince charles
prince charles

By

Published : Mar 10, 2020, 7:23 PM IST

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இன்று காமன்வெல்த் தினத்தையொட்டி, லண்டனின் மார்ல்புரோ மாளிகையில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ், கை குலுக்குவதைத் தவிர்க்கும் விதமாக இந்தியர்களைப் போன்று விருந்தினர்களை கை கூப்பி வரவேற்றார். அவரது செயல் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து ஈஸ்ரேல் மக்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, " வைரஸ் பரவலைத் தவிர்க்க இந்தியர்களைப் போல் வணக்கம் செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டது நினைவு கூரத்தக்கது.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை மூன்று ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா சூரனை எரித்து ஹோலி கொண்டாடிய மும்பைவாசிகள்!

ABOUT THE AUTHOR

...view details