இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் அந்நாட்டு தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி
பாரிஸ்: இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
pm arrives at france
இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடான பிரான்ஸ் நேற்று காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த நிலையில் பிரதமர் மோடி இந்த அரச முறை பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.