தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஊழியருக்கு கரோனா: சுய தனிமைப்படுத்தலில் போர்ச்சுகல் அதிபர்! - அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

லிஸ்பன்: ஊழியருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

போர்த்துகீசிய அதிபர்
போர்த்துகீசிய அதிபர்

By

Published : Jan 7, 2021, 9:45 PM IST

போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, கரோனா பாதிப்பு உறுதியான சிவில் சர்வீஸ் ஊழியருடன் தொடர்பில் இருந்ததால், சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இது குறித்து அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த திங்கள்கிழமை கரோனா பாதிப்புக்குள்ளான சிவில் சர்வீஸ் ஊழியருடன் சிறிது நேரம் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா உரையாடினார். முகக்கவசம் அணிந்தபடிதான் அதிபரை அவர் சந்தித்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டில் இதுவரை நான்கு லட்சத்து 37 ஆயிரம் பேர் கரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 286 பேர் உயிரிழந்துள்ளனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details