பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிவரும் தற்போதைய சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ, சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். குறிப்பாக கரோனா வைரஸ் விகாரத்தில் சீனாவின் செயல்பாடு, ஹாங்காங் விவகாரத்தில் அந்நாடு மேற்கொள்ளும் சர்வாதிகாரப் போக்கு ஆகியவை குறித்து மைக் பாம்பியோ கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.