தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

2070க்குள் கரியமிலவாயு மாசு வெளியேற்றம் பூஜ்ஜியமாக்கப்படும் - பிரதமர் மோடி - கிளாஸ்கோ

2070ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கரியமிலவாயு வெளியேற்றம் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Nov 2, 2021, 12:13 PM IST

கிளாஸ்கோ: காலநிலை மாற்றம் குறித்தான ஐநாவின் 26ஆவது மாநாடு (COP26) ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த மாநாடு வரும் நவம்பர் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

மாநாட்டின் உச்ச நிகழ்வாக, உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு நவம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. நேற்றைய நிகழ்வில் (நவ.1) பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட 120 நாடுகள்/அரசுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாமுன்னோடி

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி," அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் (2070) இந்தியாவின் கரியமிலவாயு வெளியேற்றம் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் இந்தியா பெரும் முன்னெடுப்பை மேற்கொள்கிறது .

வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், பூமியை பாதுகாக்கும் வழிமுறைகளில் உலகத்திற்கான முன்னோடியாக இந்தியா இருக்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை புதைபடிமமற்ற (non-fossil) எரிபொருள்கள் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.

நிதி ஆதரவு தேவை

குறிப்பாக, உலக மக்கள்தொகையில் 14 விழுக்காட்டை இந்தியா கொண்டிருந்தாலும், கரியமிலவாயு மாசை வெளியேற்றும் எண்ணிக்கையோ வெறும் ஐந்து விழுக்காடுதான். இந்தியாவின் கலாசாரம் இயற்கையை மையாக கொண்டது. அண்ணல் காந்தியின் போதனைகளும் அதைத்தான் எங்களுக்கு கற்றுத்தந்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கு இந்தியா போன்ற வளர்ந்த வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி ஆதரவளிக்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தில் ஒரு பில்லியன் டன் அளவை குறைக்கும் முயற்சியில் இந்தியா உள்ளது.

பாரிஸ் ஒப்பந்தம்

130 கோடி இந்தியர்கள், 2016 பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தை தங்களின் உறுதிமொழியாக கொண்டு அதை நிறைவேற்றி வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவைத்துறையான இந்தியன் ரயில்வே, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தனது கரியமிலவாயு உமிழ்வை நிகர பூஜ்ஜியமாக(Net Zero Emission) மாற்றும். மேலும், எல்இடி(LED) பயன்பாட்டின் மூலம் இந்தியா 40 பில்லியன் டன் கரியமில வெளியேற்றத்தை தடுத்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: புகழ்பெற்ற ரோம் ட்ரெவி நீரூற்றை ஜி20 தலைவர்களுடன் பார்வையிட்டார் மோடி!

ABOUT THE AUTHOR

...view details