தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

#Brexit 'விரைவுத் தேர்தலுக்கு நோ': போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் அடி! - பிரெக்ஸிட் விவகாரம்

லண்டன்: பிரிட்டனில் விரைவுத் தேர்தல் நடத்தவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேறாமல் போனது.

PM johnson

By

Published : Sep 10, 2019, 2:22 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian + Exit = Brexit) என்று அழைக்கிறார்கள்.

இந்த வெளியேற்றத்தைச் சுமுகமாக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் 'பிரெக்ஸிட் விரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறமுடியாத காரணத்தால், பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரெசா மே தன் பதவியைக் கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பிரெக்ஸிட்டை முடித்து வைக்கத் தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஆனால், பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் (No deal Brexit) நடவடிக்கைகளை போரிஸ் ஜான்சன் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனிடையே, பிரெக்ஸிட் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதாகக் கூறி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் செப்டம்பர் கூட்டத் தொடரை ஒருமாதம் முடக்குவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் அதிரடியாக அறிவித்திருந்தார். இது பிரெக்ஸிட் எம்பிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் போரிஸ்க்கு எதிராக அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடந்தேறின.

நோ டீல் கிடையது, பெரும்பான்மை கிடையாது, உடனடித் தேர்தலும் கிடையாது:

இந்நிலையில், கடந்த வாரம் பரப்பரப்பாக நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்,

  • ஒப்பிந்தமில்லாத பிரெக்ஸிட்டை தடுக்கும் மசோதா நிறைவேறியது.
  • உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த மசோதாவுக்கு பெரும்பாம்மை கிடைக்காததால் நிறைவேறாமல் போனது.
  • ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஃப்ளிப் லீ என்பவர் லிபரல் டெமாக்கிரேட்ஸிக்கு ( பிரெக்ஸிட்டுக்கு எதிரான கட்சி) தாவினார். அரசுக்கு எதிராக 21 அதிருப்தி எம்பிகள் வாக்களித்தனர். இதனால் போரிஸ் ஜான்சனின் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடி தேர்தலுக்கு வழிவகை செய்யும் தீர்மானத்தை மீண்டும் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு 293 எம்பிகள் ஆதரவாகவும், எதிராக 46 பேரும் வாக்களித்தனர். மொத்தமுள்ள எண்ணிக்கையான 650 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கான 434 என்ற எண்ணிக்கை பெறத் தவறியதால் பிரிட்டன் நாடாளுமன்ற சட்டப்படி (Fixed-term Parliaments Act, 2011) இந்த மசோதா தோல்வியில் முடிந்தது. ஆளும் கட்சியினரில் பலர் ராஜினாமா செய்தததே பின்னடைவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பிரதமர் போரிஸுக்கு மற்றுமொறு பின்னடைவாக அமைந்துள்ளது.

முடக்கப்பட குரல்

நாடாளுமன்ற முடக்கம் அமலுக்கு வந்தது:

பிரதமர் போரிஸ் உத்தரவுப்படி பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் இந்தியா நேரப்படி இன்று காலை 6:30 மணிக்கு அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிகள், 'இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்' ( Shame on you) என கன்சர்வேட்டிவ் எம்பிகளை வசைப்பாடினர். நாடாளுமன்ற முடக்கத்தை அரசின் தன்னிச்சையான நடவடிக்கை ' an act of Executive Fiat' என விமர்சித்துள்ளார்கள்.

ABOUT THE AUTHOR

...view details