கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், கரோனா தடுப்பூசி ஒன்றுக்கு பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி சிறப்பான பலன்களைத் தருவதால் அவசர பயன்பாட்டிற்கு இது பயன்படுத்தலாம் என பிரிட்டன் நாட்டின் மருத்தக மற்றும் சுகாதாரத்துறை ஒழுங்காற்று ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். அதில், அடுத்த வாரத்தில் பிரிட்டனின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டும் எனவும் இதன் மூலம் பல்வேறு உயிர்கள் பாதுகாக்கப்படும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முன்னெடுப்பு மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கை மேம்பட்டு வாழ்வாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:விற்பனையில் செயற்கை சிக்கன்: புதிய ரக மாமிசத்தைச் சாப்பிட தயாராகும் மக்கள்!