கரோனா தடுப்பு மருந்தின் ஆராய்ச்சிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இம்மாத இறுதியில் தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்களின் கரோனா தடுப்பு மருந்து என அனைத்தும் மருத்துவச் சோதனைகளில் நல்ல பலன்களையே அளித்துள்ளன.
இந்நிலையில், கரோனாவால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ள வயதானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரிட்டன் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து மற்றும் நோய்த் தடுப்புக்கான கூட்டுக் குழுவின் தலைவர் பேராசியரியர் வீ ஷென் லிம் கூறுகையில், "80 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின்னர் 70 வயதைக் கடந்தவர்களுக்கும் ஏற்கனவே மற்ற உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
தடுப்பு மருந்து விநியோகத்தில் முதல்கட்டமான இதில் கரோனாவால் உயிரிழக்க வாய்ப்புள்ள 90 முதல் 99 விழுக்காட்டினருக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படும். இனம், மொழி உள்ளிட்டவற்றால் சுகாதார கட்டமைப்பை அணுக முடியாதவர்களுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்" என்றார்.