தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

முடங்கிய பாரிஸ்... 700 கி.மீ.க்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்! - பிரான்ஸில் மீண்டும் கரோனா ஊரடங்கு

பாரிஸ்: பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிஸைவிட்டு வெளியேற முயன்றதால், சுமார் 700 கிமீ நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பிரான்ஸில் மீண்டும் கரோனா ஊரடங்கு
பிரான்ஸில் மீண்டும் கரோனா ஊரடங்கு

By

Published : Oct 31, 2020, 3:47 PM IST

Updated : Oct 31, 2020, 4:45 PM IST

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் இந்தாண்டு மார்ச் மாதம் உச்சத்தைத் தொட்டிருந்தது. அதன்பின், அங்கு கரோனா பரவல் படிப்படியாக குறைந்தது.

கரோனா பரவல் குறைந்ததை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை பிரான்ஸ் அறிவித்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரான்ஸில் தினசரி கரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால் பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதாக, அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி தொடங்கும் ஊரடங்கு டிசம்பர் 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து உணவகங்கள், பார்கள் மற்றும் அத்தியாவசியமற்ற அங்காடிகள் மூடப்பட்டன. மேலும், முடிந்தவரை மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸில் மீண்டும் கரோனா ஊரடங்கு

இந்த ஊரடங்கு அறிவிப்பு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முயன்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயன்றதால், சுமார் 700 கிலோமீட்டருக்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை கண்டித்து போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க:பிரான்ஸ் தேவாலயம் அருகே தாக்குதல் நடத்தியது யார்? - வெளியான பரபரப்பு தகவல்கள்

Last Updated : Oct 31, 2020, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details