தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெடிகுண்டு மிரட்டலால் மூடப்பட்ட ஈபிள் டவர்! - ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாரிஸ் : அலைபேசி மூலம் ஈபிள் டவருக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து ஈபிள் டவரை மூடியதோடு அப்பகுதியையும் காவல் துறையினர் முடக்கினர்.

paris-police-briefly-evacuate-eiffel-tower-after-bomb-threat
paris-police-briefly-evacuate-eiffel-tower-after-bomb-threat

By

Published : Sep 24, 2020, 12:38 AM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒய்யாரமாய் நின்று கொண்டிருக்கும் ஈபிள் கோபுரம், பல ஆண்டு காலமாக நீடித்து நிற்கும் மிக உயர்ந்த கட்டடம் என்ற சாதனையோடு, உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. உலகக் கண்காட்சி திருவிழாவிற்காக குஸ்டவே ஈபிள் என்ற கட்டட வடிவமைப்பாளரால் நிறுவப்பட்ட இந்த ஈபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பொது மக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஈபிள் டவரை பார்த்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் ஈபிள் டவரில் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்று (செப்.23) காலை காவல் துறையினருக்கு வந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈபிள் டவர் பகுதியில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் வெளியேற்றி, காவல் துறையினர் அப்பகுதியை முடக்கினர்.

தொடர்ந்து ஈபிள் டவர் பகுதியில் உள்ள சாலைகளையும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ஈபிள் டவரில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மிரட்டல் பொய் என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க:32 நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆன ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details