ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 850 ஆண்டுகள் பழமைவாய்ந்த நோட்ரே டேம் தேவாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
ஃபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்களுக்கு அதிபர் பாராட்டு! - fire
பாரிஸ்: புகழ்பெற்ற தேவாலயத்தில் ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயத்தில் தீ விபத்து
இது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், " மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தீயணைப்பு வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். தேவாலயத்தின் சீரமைப்பு பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி வசூல் செய்யப்படும் " என தெரிவித்தார்.
இதற்கிடையே, அந்நாட்டு பிரபல தொழிலதிபர் பிரான்கோஸ் பினால்ட் 113 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீரமைப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.