உக்ரைன் நாட்டில் வாடகைத் தாய் முறை அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்திற்கு பின், வெளிநாடுகளிலிருந்து உக்ரைனிற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் தலைநகர் கீவ்வில் வாடகைத் தாய் மூலம் பிறந்த தங்களது குழந்தைகளை நேரில் பார்க்க முடியாமல் தம்பதிகள் தவித்துவந்தனர்.
இதனையடுத்து குழந்தைகளைக் காண உக்ரைன் வருவதற்கு தங்களுக்கு பாஸ் வேண்டுமென 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள் அந்நாட்டு அரசிடம் வேண்டுகோள்விடுத்தனர். இதனைப் பரிசீலித்த அரசு, 80 தம்பதிகள் வர அனுமதியளித்துள்ளது.