ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்து, அம்மாநிலத்தை 2 ஒன்றிய பிரதேசங்களாகப் பிரித்தது மத்திய அரசு. இதனையடுத்து மாநிலம் முழுவதிலும் பரபரப்பானச் சூழல் நிலவியதால் கடும் கட்டுபாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டது. மேலும், கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வீட்டில் சிறை வைக்கப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் தொலைபேசி, இணையதளம் என அனைத்தும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன், நேற்று பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காஷ்மீர் விவகாரத்தினையொட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கொடியை ஏந்தியபடி இந்தியத் தூதரகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களுடன் பிரிட்டன் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.