தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

செப்டம்பருக்குள் 10 லட்சம் தடுப்பூசி ஆய்வுகள்; ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் - லண்டன் கரோனா வைரஸ் பாதிப்பு

லண்டன்: வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் விதமான தடுப்பூசிகளை ஆய்வு செய்யும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

oxford
oxford

By

Published : Apr 19, 2020, 5:13 PM IST

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பைத் தடுக்க மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணித் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நோய்த் தீவிரம் அதிகமாக உள்ள பிரிட்டன் நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு நிறுவனம் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டு காலம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கோவிட் - 19 தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.

அதற்காக சுமார் பத்து லட்சம் முறைகளைக் கண்டறிந்து 18 - 55 வயது கொண்ட மக்களைக் கொண்டு பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக லட்சக்கணக்கான ChAdOx1 என்ற மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள லண்டன் நகரை, தற்போது கரோனா மையம் கொண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் சல்யூட்

ABOUT THE AUTHOR

...view details