கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவருகின்றன. கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 64 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் செல்லப்பிராணிகள் வழியாகப் பரவும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் கரோனா அச்சத்தால் அவைகளை ஒதுக்கும் நிகழ்வுகளும் பல இடங்களில் அவ்வப்போது நடக்கின்றன.
அந்த வகையில், துருக்கியில் இஸ்தான்புல்லைச் சேர்ந்த மக்கள், வீடுகளில் வளர்த்த செல்லப் பிராணிகளை சாலையிலோ, வனப்பகுதியிலோ தனித்துவிட்டு-வருகின்றனர்.
இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் துகே அபுகன் கூறுகையில், "கடந்த மூன்று வாரத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளன. நாய் மூலம் கரோனா வைரஸ் தங்களைத் தாக்கிவிடும் என மக்கள் பயப்படுகின்றனர். இதைச் சரிசெய்ய செல்லப் பிராணி மூலம் பரவாது என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதுவரை துருக்கி நாட்டில் 82 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறி இறுதிச் சடங்கு - லட்சக்கணக்கில் கூடிய மக்கள்!