தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரெஞ்சு படையினரின் வான்வழி தாக்குதல்: 50 பயங்கரவாதிகள் மரணம்! - Over 50 terrorist killed

பிரெஞ்சு படையினரின் வான்வழி தாக்குதல் நடத்தியதில் அல் கொய்தாவுடன் இணைந்த 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது.

over-50-terrorist-killed-in-french-airstrike-in-mali
over-50-terrorist-killed-in-french-airstrike-in-mali

By

Published : Nov 3, 2020, 3:39 PM IST

மத்திய மாலி பகுதியில் பிரெஞ்சு படையினரால் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்கள் மூலம் அல் கொய்தாவுடன் இணைந்த 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரெஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளொரன்ஸ் பார்லி கூறுகையில், எல்லைப் பகுதியான புர்கினா ஃபசோ மற்றும் நிகர் ஆகிய இடங்களில் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது. அப்போது அதிக அளவிலான இருசக்கர வாகன கேரவன் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த வான்வழி தாக்குதலின்போது 30 இருசக்கர வாகனங்களும் அழிக்கப்பட்டன. தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகள் மரங்களுக்கு கீழ் சென்று பதுங்கினர். இதனைத்தொடர்ந்து பிரெஞ்சு படையினர் மிசைல் தாக்குதல் நடத்தினர். இதனால் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்'' என்றார்.

பயங்கரவாதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு படையினரின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அன்சரூல் இஸ்லாம் அமைப்பிற்கு பெரும் அடி விழுந்துள்ளது. இந்த இஸ்லாம் அமைப்பு அல் கொய்தா அமைப்பிற்கு ஆதரவாக செயல்படும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காபூல் பல்கலையில் தாக்குதல்: 20 நபர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details