தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உக்கிரமடையும் உக்ரைன் போர்: மற்றொரு இந்திய மாணவர் உயிரிழப்பு - பஞ்சாப் மாணவர் சந்தன் ஜிந்தல்

இந்திய மாணவர் உயிரிழப்பு
இந்திய மாணவர் உயிரிழப்பு

By

Published : Mar 2, 2022, 5:38 PM IST

Updated : Mar 2, 2022, 7:46 PM IST

17:25 March 02

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உடல்நிலை பிரச்சனை காரணமாக இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.

குறிப்பாக, அந்நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கார்கீவ்வில் இருந்து இந்திய மாணவர்கள் உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குள்) வெளியேறும்படி இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு வாகனங்கள் மூலமாகவோ அல்லது வாகனங்கள் கிடைக்காதப்பட்சத்தில் நடந்தாவது செல்லும்படி அவசர உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டின் வின்னிட்ஸியாவில் படித்துக்கொண்டிருக்கும் சந்தன் ஜிந்தல் என்னும் 21 வயது மாணவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்கு நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்ததாகவும் தெரிகிறது.

தந்தையின் முன்னே உயிர்பிரிந்தது...

சந்தனுக்கு மூளையில் நோய் இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், அவரை கவனித்துக்கொள்ள இந்தியாவிலிருந்து, சந்தனின் தந்தை சிஷ்ணா குமாரும், உறவினரான கிருஷ்ண குமாரும் கடந்த பிப். 7ஆம் தேதி உக்ரைன் சென்றுள்ளனர் என்ற முதல்கட்ட தகவல்கள் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தெரியவந்துள்ளது.

உறவினர் கிருஷ்ணா நேற்று (மார்ச் 1) இந்தியா திரும்பிவிட்ட நிலையில், நோய்வாய்ப்பட்ட மகனை கவனித்துக்கொள் சிஷ்ணா குமார் உக்ரைனில் தங்கியுள்ளார். அவர் மூலமாகவே, அவரது குடும்பத்தினருக்கு சந்தன் ஜிந்தலின் இறப்பு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் உறவினர் கிருஷ்ணா, தான் ருமேனியாவின் எல்லையில் இருந்து, தான் மிகுந்த சிரம்மத்திற்கு இடையே நாடு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கார்கீவ்வில் நடந்த தாக்குதலில் சிக்கி கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா உயிரிழந்ததை அடுத்து, இரண்டாவதாக நோய்வாய்ப்பட்டு சந்தன் ஜிந்தல் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார்கீவ்வில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு அவசர உத்தரவு

Last Updated : Mar 2, 2022, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details