சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. குறிப்பாக, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிமாக உள்ளது.
கொவிட்-19 தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்த இத்தாலி அரசு அந்நாட்டில் அவசர நிலையைப் பிரகனடப்படுத்தி போரக்கால அடிப்படையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதையடுத்து, இத்தாலிக்கு அடுத்தப்படியாக அதன் அண்டை நாடான ஸ்பெயினும் தற்போது அவசர நிலையை அறிவித்துள்ளது.
"நம் உடல், வாழ்க்கையைப் பாதிக்கும் பேரிடர் இது" எனக் கூறி அவசர நிலையை அறிவித்த ஸ்பெயின் பிரதமர் பெத்ரோ சான்செஸ், வரும் நாள்களில் அந்நாடு முழுவும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடும் என்றும், அதனை எதிர்கொள்ள அரசு ஆயத்தமாகி வருவதாகவும் கூறியுள்ளார்.