தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Noble Price 2019: இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் - இலக்கியத்துகான நோபல் பரிசுகள்

ஸ்டாக்ஹோம்ஸ்: எழுத்தாளர்கள் ஓல்கா டோக்கார்ஸூக், பீட்டர் ஹான்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தனித்தனியே அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel prize

By

Published : Oct 10, 2019, 11:18 PM IST


இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் அல்பிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்தப் பரிசானது, உலகின் மிகவும் கவுரவமிக்க பரிசாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான, நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கஹோமில் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவத்திற்கான நோபல் பரசு திங்கள்கிழமை, இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்கிழமை, வேதியிலுக்கான நோபல் பரிசு புதன்கிழமை அன்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று ஸ்டீவிஸ் அகாடெமியில் இலக்கியத்துகான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஒல்கா டோகார்ஸுக் (Olga Tokarczuk), ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹான்க்கே (Peter Handke) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஒல்கா டோகார்ஸுக்-க்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு 2018-க்கானது. பாலியல் வன்கொடுமை சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஸ்வீடிஸ் அகாடெமி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details