2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெண் கவிஞர் லுயிஸ் க்ளுக் இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
1943ஆம் ஆண்டு நியூ யார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளுக் யேல் பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியையாகப் பணிபுரிந்துள்ளார். 1968 Firstborn என்ற நூல் மூலம் இலக்கிய உலகிற்கு பரிச்சயமான இவர், அமெரிக்க இலக்கிய உலகின் முன்னணி கவிஞராக உருவெடுக்கத் தொடங்கினார். 1993ஆம் ஆண்டில் புலிட்சர் விருது, 2014ஆம் ஆண்டில் நேஷ்னல் புக் விருது என முன்னணி விருதுகளை இவர் வென்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹான்ட்கே என்பவருக்கு வழங்கப்பட்டது. இதுவரை, இந்தியாவிலிருந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசை ரவீந்திரநாத் தாகூர் மட்டுமே வென்றுள்ளார்.