பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 14 ஆயிரம் மோடி ரூபாய் கடன் பெற்றார். இவர் மோசடி செய்தது வெளிவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பியோடினார்.
இதனைத்தொடர்ந்து அமலாக்கத் துறையினர், சிபிஐ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு நீரவ் மோடியை கைது செய்த லண்டன் காவலர்கள், சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இன்று நடந்த விசாரணையில் நீரவ் மோடி காணொலி காட்சி வாயிலாக சிறையிலிருந்தவாறே ஆஜாரானார். இதனைத்தொடர்ந்து நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து, வழக்கின் விசாரணை நவ.3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த விசாரணையில், இந்திய அலுவலர்களால் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் ஒப்புதலைப் பற்றி நீதிமன்றம் வாதங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பினரின் ஆதாரங்களை சரிபார்த்து விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சிரி, அலெக்சா, கூகுள் போன்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் அரசு இ-சேவை!