பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரத்து 700 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பி சென்ற இந்திய வைர வியாபாரி நீரவ்மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் மறுப்பு - விரைவில் இந்திய சிறையை நிரப்பவுள்ளார் நீரவ் மோடி - ஜாமீன் மறுப்பு
லண்டன்: வங்கி மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் 4ஆவது முறையாக தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மூன்று முறை மனு தாக்கல் செய்தார். ஆனால் மூன்று முறையும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.
இந்நிலையில் அவர் 4ஆவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 4ஆவது முறையாக லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.