தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நிரவ் மோடிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு - பண மோசடி நிரவ் மோடி

லண்டன்: நிரவ் மோடி சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

nirav

By

Published : Nov 6, 2019, 11:30 PM IST

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.

இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துமாறு இந்திய அரசு வைத்திருந்த வேண்டுகோளின் படி லண்டனில் கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது லண்டனின் வாண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்மா அர்பட்நாட் முன்பு இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிரவ் மோடியின் ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிங்க: அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரில் லாபம் கண்ட இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details