மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை (அக்.16) அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்ததத்தை நீட்டிக்க அழைப்பு விடுத்துள்ளார். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு அதை நீட்டிக்க அவர் முன்மொழிந்தார்.
ரஷ்ய மற்றும் அமெரிக்க உயர் அலுவலர்களிடமிருந்து முரண்பட்ட சமிக்ஞைகளுக்கு மத்தியில் புதினின் இந்த அறிக்கை வந்துள்ளது.
தனது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய புடின், "இந்த ஒப்பந்தம் மாற்றப்படாமல் நிறுத்தப்பட்டால் அது மிகவும் வருத்தமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில், “இந்த ஒப்பந்தம் ஆயுதப் போட்டியை கட்டுப்படுத்துவதற்கும் மட்டுப்படுத்துவதற்கும் அடிப்படை பங்கைக் கொண்டுள்ளது.
1987 இடைநிலை அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் விலகின. தற்போது இரு நாடுகளுக்கு இடையே ஒரே அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் நியூ ஸ்டார்ட் மட்டுமே.
ரஷ்யா முன்னர் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு அதன் நீட்டிப்பை வழங்கியது, அதே நேரத்தில் யு.எஸ் நிர்வாகம் சீனாவை உள்ளடக்கிய ஒரு புதிய ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திற்கு முன்வந்தது.