தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா நேரத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் வழிமுறை - கிமோதெரபி

லண்டன்: மார்பக புற்றுநோயால் அவதிப்படும் பெண்களுக்கான உடனடி தேவை கீமோதெரபியா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை கண்டறியும் வழிமுறையை லண்டன் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா
கரோனா

By

Published : Jun 10, 2020, 6:54 PM IST

உலக அளவில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் அதற்கு அதிக கவனம் செலுப்பட்டு வருகிறது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி தேவைக்கு ஏற்ப மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதால் மருத்துவர்கள் மூலம் புற்று நோயாளிகளுக்கு தொற்று பரவும் அபாயமும் அதிகம் உள்ளது.

மார்பக புற்றுநோய் இருக்கும் பெண்களை பொறுத்தவரையில், அவர்களுக்கு மேற்கொள்ளும் பரிசோதனையில் 70 விழுக்காடு ஆஸ்ட்ரோஜன் பாசிட்டிவ், ஹர் 2 நெகட்டிவ் கண்டறியப்படும். அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்நிலையில், லண்டனில் உள்ள மார்ஸ்டன் மருத்துவனையில் நடத்திய ஆய்வில், மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு அல்கோரிதம் (Algorithm) முறையில் படிப்படியாக நோயின் நிலையை கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த கீமோதெரபி அளிக்கலாம் அல்லது உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் கட்டியை அகற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உச்சத்தை தொடும் கோவிட்-19 பாதிப்புகள் : கதி கலங்கி நிற்கும் பாகிஸ்தான் அரசு!

ABOUT THE AUTHOR

...view details