ஆம்ஸ்டர்டேம்: நெதர்லாந்து நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே நேற்று (டிசம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நெதர்லாந்தில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் (இன்று) பொது முடக்கம் அமலாகிறது.
தற்போது, பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று நெதர்லாந்தில் ஐந்தாவது அலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பொது முடக்க நடைமுறை தவிர்க்க முடியவில்லை" என்றார்.
ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டாலும், புதிய விதிகள் குறித்து அந்நாட்டு அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால், தற்போது உள்ள பகுதிநேர பொதுமுடக்கத்தின் சில நடைமுறைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பார்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்றவை மாலை 5 மணிக்கு மூடப்படுவது நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதுவரை, அந்நாட்டில் மொத்தம் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவின் அடுத்த தடுப்பூசி 'கோவோவாக்ஸ்'-க்கு WHO அனுமதி