வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றது. இதில் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நீரவ் மோடி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்- வெளியுறவுத்துறை தகவல் - london
டெல்லி: பஞ்சாப் தேசிய வங்கி முறைகேட்டில் லண்டன் தப்பி சென்ற நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூறியுள்ளார்.
அப்போது நீரவ் மோடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரவீஷ் குமார், நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியா நீரவ் மோடியை நாடுகடத்த பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்நாட்டின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே நீரவ் மோடி தான் லண்டனில் 72 கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகையில் வசித்து வருவதாகவும், வைர வியாபாரம் செய்து வருவதாகவும் செய்தியாளர்களுக்க பேட்டியளித்தது குறிப்பிடதக்கது.