கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் இந்த குழுமத்தின் 17ஆவது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஜர்பைஜான் நகரில் இந்த இயக்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 25,26 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.
சில காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்த அணிச்சேரா இயக்கமானது 1961ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அணிசேரா இயக்க மாநாட்டை நிராகரித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.