ரஷ்யாவில் பாதாளச் சாக்கடைக் குழிக்குள் விழும் சிறுமியை உயிரைப் பணயம் வைத்து தாயார் காப்பாற்றும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், தாய் தனது மகளுடன் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அக்குழந்தை அருகிலிருந்த பாதாளச் சாக்கடைக் குழிக்குள் விழுகிறது. இதைப்பார்க்கும் தாயார் அதிர்ச்சி அடைகிறார்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட அவர் யாருக்காகவும் காத்திருக்காமல், பாதாளச் சாக்கடையின் மூடியை தூக்கி எறிகிறார். பின்னர் தன்னால் முடிந்தவரை குழிக்குள் தலையை விட்டுத் தனது குழந்தையைத் தூக்க முயல்கிறார். இதைப் பார்த்து ஓடிவந்த மற்ற நபர்கள் அவருடன் இணைந்து குழந்தையைப் பத்திரமாக வெளியே தூக்கினர்.
இந்நிகழ்வின் சிசிடிவி காட்சியைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய தாயாருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்