தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கியுள்ளேன் - தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நபர்

லண்டன்: உலகிலேயே முதல் நபராகத் தடுப்பூசியை போட்டுக்கொண்ட மார்கரேட் கீனான், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மார்கரேட் கீனான்
மார்கரேட் கீனான்

By

Published : Dec 8, 2020, 5:23 PM IST

உலகிலேயே முதல்நாடாக பிரிட்டனில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மார்கரேட் கீனான் என்ற 90 வயது மூதாட்டி, உலகிலேயே முதல் நபராகத் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். பின்னர், செய்தியாளர் ஒருவர் அவரை சந்தித்து பல கேள்விகளை எழுப்பினார்.

அப்போது, வரலாற்றில் இடம்பிடித்துள்ளீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என செய்தியாளர் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, "எப்படி உணர்கிறேன் என்பது கூட தெரியவில்லை. மிகவும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் உணர்கிறேன். நல்ல காரணத்திற்காக இதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மார்கரேட் கீனான்

இது மிகவும் கொடூரமான நோய். எனவே, இதிலிருந்து விடுபட வேண்டும். அந்த விதத்தில் எது கிடைத்தாலும் நல்லதுதான். வார்டுக்கு சென்ற பின் ஓய்வெடுக்கவுள்ளேன். பின்னர், குடும்பத்தினரிடம் பேசவுள்ளேன். இன்று மதியமே வீட்டிற்கு செல்லவுள்ளேன். மருத்துவமனை பணியாளர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டார்கள்" என்றார்.

பெருந்தொற்றை எப்படி கையாண்டுள்ளீர்கள் என செய்தியாளர் கேட்டதற்கு, "விதிகள் கடுமையாக அமலில் இருந்தது. இப்போதுதான், சற்று நிம்மதியாக உள்ளது. திடீரென அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையிலிருந்து உடனடியாக வீடு திரும்புவது சந்தேகம் தான். எனவே, நான்கு, ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் இங்கேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளேன்" எனப் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details