தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எட்டு வினாடிகளில் வீழ்த்தப்பட்ட பிரம்மாண்ட பாலம்! - இத்தாலி

ரோம்: கடந்த வருடம் விபத்துக்குள்ளான மோரான்டி ஜெனோவா பாலத்தின் மீதியை, ஜெனோவா மாநகராட்சி ஊழியர்கள் இன்று வெடிவைத்து தகர்த்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Morandi Genoa

By

Published : Jun 28, 2019, 8:55 PM IST

இத்தாலி நாட்டில் ஜெனோவா நகரில் உள்ளது மோரான்டி ஜெனோவா பாலம். 4,500 டன் எஃகு, கான்கிரிட் ஆகியவை கொண்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டது. இந்த பாலம் இத்தாலியையும், வடக்கு பிரான்ஸையும் இணைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மோரான்டி ஜெனோவா பாலம் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 148 அடியில் இருந்து சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பாலத்தின் மேல் காரில் பயணித்த 43 பேர் உயிரிந்தனர். விபத்தில் சிக்கி மீதியுள்ள பாலத்தினை ஜெனோவா மாநகராட்சி ஊழியர்கள் வெடிகுண்டு வைத்து இன்று தகர்த்தனர்.

எட்டு வினாடிகளில் வீழ்த்தப்பட்ட பிரம்மாண்ட பாலம்!

முன்னதாக வெடிகுண்டு வைத்து தகர்ப்பதற்கு முன்பு வயதானோர், கர்ப்பிணி பெண்கள் உட்பட 3,400 பேரை அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். பாலத்தினை சுற்றி 300 மீட்டரில் உள்ள அனைத்தும் வெடிப்பதற்கு முன்பு மூடப்பட்டது. இன்று காலை பாலத்திலும், அதனை சுற்றியுள்ள கோபுரங்கள் இரண்டிலும் வைக்கப்பட்ட வெடிகுண்டால் எட்டி வினாடிகளில் பாலம் தகர்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details