தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜி7 நாடுகளின் சந்திப்பை புறக்கணித்த ஜெர்மன் அதிபர்! - ஏழு நாடுகளின் உச்சிமாநாடு

பெர்லின் : அமெரிக்காவில் உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜி7 நாடுகளின் சந்திப்பை புறக்கணித்த ஜெர்மன் அதிபர்!
ஜி7 நாடுகளின் சந்திப்பை புறக்கணித்த ஜெர்மன் அதிபர்!

By

Published : May 30, 2020, 4:38 PM IST

அமெரிக்காவை அடுத்துள்ள கேம்ப் டேவிட்டி பகுதியில் ஜூன் 10, 11, 12 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவிருந்த ஏழு நாடுகளின் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்த், அமெரிக்கா) உச்சிமாநாட்டு சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சில நாள்களுக்கு முன்னர் ரத்து செய்திருந்தார்.

இதனையடுத்து, உலகத் தலைவர்களுடன் நேரில் சந்திப்பை நடத்துவது குறித்து மீண்டும் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான இந்த ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் கோவிட்-19 பிறகான காலக்கட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் விரும்புவதாக அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நேரில் கலந்து கொள்வது குறித்தோ அல்லது காணொலி சந்திப்பில் கலந்துகொள்வது தொடர்பாகவோ அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

ஜி7 நாடுகளின் சந்திப்பை புறக்கணித்த ஜெர்மன் அதிபர்!

இது தொடர்பாக ஜெர்மன் அதிபர் அலுவலகம் கூறுகையில், "இன்றைய நிலவரப்படி, உலகளவில் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அவர் நேரில் பங்கேற்க போவதில்லை" என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க :முன்னாள் பாக். பிரதமர் நவாஸுக்கு எதிராகக் கைது ஆணை...!

ABOUT THE AUTHOR

...view details