இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், "கொவிட்-19 வைரஸை குணப்படுத்த தடுப்பூசிகளோ, மாத்திரைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த வைரஸால் 60 இருந்து 70 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கூறுகின்றனர்" என்றார்.
மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், அரசின் முயற்சி வீண் போகாது எனவும், மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொவிட்-19 ( கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியைப் பொறுத்தமாட்டில் நேற்றைய நிலவரப்படி, ஆயிரத்து 300 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : 'கொரோனா வைரஸுக்கு மருத்துவக் காப்பீடு செல்லுபடியாகும்'