இதுகுறித்து ட்வீட் செய்திருந்த சுவிட்சர்லாந்தில் இருக்கும் இந்தியத் தூதரகம், "கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியர்களுடன் சுவிட்சர்லாந்து தோளோடு தோள் நிற்பதை உணர்த்தும் விதமாக, மேட்டர்ஹாம் சிகரத்தின் மீது பிரமாண்டமான (1000 மீட்டர்) இந்திய மூவர்ணக் கொடி ஒளிரவிடப்பட்டது" எனக் கூறியுள்ளது.
இந்தப் பதிவில் மூவர்ணக் கொடி போர்த்திய மேட்டர்ஹான் சிகரத்தின் படத்தையும் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் இணைத்துள்ளது. இப்பதிவை ட்வீட் செய்த பிரதமர் நரேந்திர மோடி, "கோவிட்-19 நோயை இந்த உலகமே ஒற்றுமையுடன் எதிர்த்து வருகிறது. இந்த பெருந்தொற்றை மானிடம் வென்றுவிடும்" எனக் கூறியுள்ளார்.