தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவை புறம்தள்ளிவிட்டு பிரதமருக்கு எதிராக ஜெருசலேமில் திரண்ட மக்கள்! - டெல் அவிவ்

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அவரைப் பதவி விலக வலியுறுத்தி, இஸ்ரேல் நாட்டில் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடந்து வருகிறது. இச்சூழலில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

protests against Netanyahu
protests against Netanyahu

By

Published : Aug 3, 2020, 12:36 PM IST

Updated : Aug 3, 2020, 2:09 PM IST

டெல் அவிவ்:அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டில் கரோனா பாதிப்பை முறையாக கையாளவில்லை என்றும், அதனால் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவரை பதவி விலக வலியுறுத்தி, அங்கு கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடந்து வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ்: விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு, நீரில் தரையிறங்கிய விண்கலம்!

தற்போது இந்தப் போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 1) தலைநகர் ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு இல்லத்திற்கு முன்பு, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமருக்கு எதிராக திரண்ட போராட்டக்காரர்கள்
பிரதமருக்கு எதிராக திரண்ட போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள் சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டு, பெரும் திரளாக திரண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பிட்காயின் மோசடிக்காக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மூவர் கைது!

ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பலரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Last Updated : Aug 3, 2020, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details