ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு முறை தோல்வியைசந்தித்து. இந்நிலையில், மூன்றாம் கட்ட வாக்கெடுப்புக்கு பிரதமர் தெரெசா மே தயாராகிவருகிறார். இதற்கு அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பிரிக்ஸிட் விவகாரம்! பிரதமருக்கு கடிதம் எழுதிய உளவியல் நிபுணர்
லண்டன்: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி பிரிட்டன் பிரதமர் தெரெசா மேவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதிய உளவியல் நிபுணர்
இந்நிலையில், யூரி ஜெல்லா் எனும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான இவர்பிரிட்டன் நாட்டுகுடிமகனும்ஆவார். இவர் தெரசா மேவிற்கு பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடித்தில், "இது சோகத்தை ஏற்படுத்தும், இளைஞர்களுக்கு பேரழிவாக அமையும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்.மிகப்பெரிய பேரழிவு வருவதை நான் உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.