உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போராடிவருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் மலேரியாவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கரோனாவை தடுக்க உதவும் என தகவல் வெளியானது.
இதனை பயன்படுத்தி இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம் என அறிவித்த நிலையில் பல நாடுகள் தங்களுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யவேண்டும் என வேண்டுகோள்விடுத்தன.
இந்நிலையில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உண்மையிலேயே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கரோனாவை கட்டுப்படுத்துமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடத்தொடங்கினர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம், கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்கி அவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்த ஆராய்ச்சி முடிவில் இந்த மருந்து கரோனாவை கட்டுப்படுத்த உதவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,542 பேர்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தியதில் 28 நாள்களுக்குள் 25 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீண்ட நாட்களாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தான் ஆராய்ச்சி நடத்தியது. எனவே இந்த தகவல் உண்மையாக இருக்கும் எனவும் அதிகாரபூர்வமான தகவலை விரைவில் ஆக்ஸ்போர்டு வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20ஆம் நிதியாண்டில் 4.2 விழுக்காடு!