பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் இன்று (செப். 30) திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நகர் முழுவதிலும் இந்தச் சத்தம் கேட்டதை அடுத்து, ஏதேனும் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதோ என்ற அச்சம் உருவானது.
முதலில், இந்தச் சத்தத்தை உறுதிசெய்த அந்நாட்டு காவல் துறை இதன் காரணத்தை உடனடியாக ஆராய்ந்தபோது இந்தச் சத்தம் வெடிவிபத்தின் காரணமாக ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. அங்குள்ள சூப்பர்சோனிக் ஜெட் விமானம் பறந்ததால் ஏற்பட்ட சத்தமே இந்தப் பதற்றத்துக்கு காரணம் என அந்நாட்டு காவல் துறை விளக்கமளித்தது.