கோவிட்-19 தொற்று பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளும் இந்தத் தொற்றால் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் மாதம் மட்டும் 41,623 பேர் வேலையிழந்துள்ளனர். தற்போது வரை அங்கு வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது,
இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் மாட்ரிட் பகுதியிலுள்ள உள்ளூர் சந்தை ஒன்றில் உணவு வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்தையில் அருகிலிருக்கும் கடைக்காரர்களும் தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த பொருள்களை வழங்குகின்றனர். வேலையிழந்து வறுமையில் வாடும் நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.