தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2019, 6:10 PM IST

ETV Bharat / international

சமையலறையில் தொங்கவிட்டிருந்த ஓவியம்... 46 கோடி மதிப்பா என அதிர்ச்சியில் மூதாட்டி!

பிரான்ஸ்: மூதாட்டி தனது வீட்டின் சமையலறையில் 46 கோடி மதிப்புள்ள அரிய ஓவியத்தை பலஆண்டுளாகத் தொங்க விட்டிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதிர்ச்சியில் மூதாட்டி

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி தனது வீட்டில் பல காலங்களாக ஓவியம் ஒன்றை சமையலறையின் சுவற்றில் அலங்கரித்திருந்தார். இந்நிலையில் பழைய ஓவியங்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது என்பதை அறிந்த மூதாட்டி தனது வீட்டில் உள்ள ஓவியத்தை விற்பனை செய்வது பற்றி விசாரிக்கும் போது மிக பெரிய அதிர்ச்சியில் மூழ்கினார். அந்த ஓவியமானது 1280-ம் ஆண்டு சிமாப்யூ என்பவரால் கிரைஸ்ட் மாக்ட்( Christ Mocked) என்னும் தலைப்பில் 8 அரிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதில் ஒன்று என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஓவியம் லண்டன் ஆர்ட் காட்சியகத்திலும், இன்னொரு ஓவியம் நியூயார்க்கில் உள்ள ஃப்ரிக் சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

46 கோடி மதிப்புள்ள அரிய ஓவியம்

இதனைப் பற்றி முதுநிலை நிபுணர் எரிக் டர்கின் கூறுகையில்," ஓவியத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் இது இத்தாலிய மாஸ்டரின் பாணியில் இருந்தது மற்றும் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஓவியங்களில் இருந்த வூட் பேனலில் செய்யப்பட்ட சுரங்கங்களுடன் பொருந்துகிறது. மேலும் ஓவிய வல்லுநர் சிமாப்யூ படைப்புகள் மிகவும் அரிதானவை. நான் ஒரு கலை மாணவனாக இருந்தபோது, ​​அவருடைய ஓவியங்கள் எனக்கு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்தது கூட கிடையாது" என்று தெரிவித்தார்

இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 மில்லியன் யூரோ இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி பாரீஸில் ஏலத்திற்கு வருகிறது. இன்னும் கிரைஸ்ட் மாக்ட் வரிசையில் உள்ள ஐந்து ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: கார் டயருக்குள் சிக்கிய நாய் - வெளியே வரமுடியாமல் தவித்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details