ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதின் எதிரொலியாக நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா தொடங்கி தற்போது உலகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்துவருகிறது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதிற்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டத்தின்போது இந்திய தூதரகத்திற்கு வெளியே அமைக்கப்படிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத கும்பலால் சேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் லண்டனில் நடைபெறும் போராட்டத்தால் அடையாளம் தெரியாத நபர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற வாளாகத்தில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய முக்கிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் அச்சிலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.