பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றம் அருகே நேற்று இரவு அந்நாட்டு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சுமார் 11.50 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) அங்கு சந்தேகப்படும்படியான நபர் சுற்றுத்திரிவதைப் பார்த்தனர். அதனையடுத்து அவரிடம் அருகில் சென்று விசாரித்தபோது, அந்த நபர் திடீரென இரண்டு கத்திகளை எடுத்து காவல் துறையினரை தாக்க முயன்றார்.
இதையடுத்து, தங்களை தற்காத்துக்கொள்ள காவல் துறையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
பிரிட்டனில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடில் ஈடுபடுவது மிகவும் அரிதான ஒன்றாகும். கடந்த ஆண்டு (2019) லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது கத்திக்குத்து நடத்திய ஐஎஸ் பயங்கரவாதி ஒருவரை அந்நகர காவல் துறையினர் சுட்டுவீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து குறைவு!