லண்டன்: ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் முழுமையாக செலுத்திய ஆறு வாரங்களுக்கு பிறகு அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குவதாகவும், 10 வாரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலாகக் குறைய வாய்ப்புள்ளது என்று தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் (UCL) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு வீழ்ச்சியடைந்தால், புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு கவலையளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆறு வாரங்களில் குறைகிறது
இதுகுறித்து யுசிஎல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் இன்ஃபர்மேட்டிக்ஸை சேர்ந்த மதுமிட்டா ஷ்ரோத்ரி கூறுகையில், "அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்திய சமயத்தில், அதன் ஆன்டிபாடியின் அளவு மிக அதிகமாக இருந்தது.
அவை கரோனா வைரஸை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், இரண்டு அல்லது மூன்று மாதங்களின் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அளவு கணிசமாக குறைந்துவிட்டன.