தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போர்க்குற்ற விசாரணைக்காக, ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஹசிம் தாசி - போர்க்குற்ற விசாரணை

போர்க்குற்ற விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜாராவதற்காக கொசோவோ ஜனாதிபதி ஹசிம் தாசி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

kosovo-president-resigns-to-face-war-crimes-charges
kosovo-president-resigns-to-face-war-crimes-charges

By

Published : Nov 5, 2020, 9:39 PM IST

கொசோவோவின் கிளர்ச்சி ராணுவத்தின் அரசியல் தலைவராக தாசி இருந்தபோது, 1990ஆம் ஆண்டு செர்பியா உடனான மோதலில் தொடர்புடைய குற்றச்சாட்டு உறுதியானது. இதனை எதிர்கொள்வதற்காக ஹசிம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜாராகவுள்ளார்.

இதுகுறித்து ஹசிம் கூறுகையில், ''கொசோவோ நாட்டு தலைவராக நான் நீதிமன்றத்தில் ஆஜராகும் எந்தச் சூழ்நிலையையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஜனாதிபதி அலுவலகத்தின் மரியாதை, நாட்டு மக்களின் மரியாதையை பாதுகாப்பதற்காக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். கடந்த மூன்று தசாப்தங்களாக என்னை ஆதரித்து, நம்பிக்கை வைத்து நாட்டை கட்டமைத்த என் ஆதரவாளருக்கும், குடும்பத்தினருக்கும் இந்த முடிவு கடினமாக இருக்கும்'' என்றார்.

செர்பியாவின் அடக்குமுறையில் இருந்து விடுபடுவதற்காக அல்பேனிய இன மக்கள் அதிகமாக வசிக்கும் கொசோவோவில் நியாயமான போராட்டத்தை தான் வெளிப்படுத்தினோம். அதனால் தன்னை குற்றமற்றவர் என்றே ஹசிம் பல ஆண்டுகளாக கூறிவந்தார்.

இதனிடையே ஜூன் மாதத்தில், வழக்கறிஞர்கள் ஹசிம் மீது கொலை குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெள்ளை மாளிகையை நோக்கி பிடன்? முக்கிய மாகாணங்களில் கடும் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details