பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் உள்ள வில்லர்பன் (viluerbanne) பகுதியில் அடிக்கடி குற்றச்சம்பங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அப்பகுதியில் உள்ள சுரங்க ரயில் நிலையம் அருகே ஒரு கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பிரான்ஸில் கத்திக்குத்து:ஒருவர் உயிரிழப்பு, 9 பேர் படுகாயம்! - பிரான்ஸில் கத்திகுத்து
பிரான்ஸ்: லயோன் நகரில் வில்லர்பன் சுரங்க ரயில் நிலையம் அருகே நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
knife-attack-in-france-viluerbanne
மேலும், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை காவலில் எடுத்து கத்திக்குத்திற்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் அரசாங்கம் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.