தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பஞ்சாப் இளைஞர்களை பாகிஸ்தான் சீரழிக்கிறது: காலிஸ்தான் குற்றச்சாட்டு

லண்டன்: போதைப் பொருள், ஆயுதங்களை பஞ்சாபுக்குள் கொண்டுவந்து அம்மாநில இளைஞர்களை பாகிஸ்தான் சீரழித்து வருவதாக காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Khalistani leader

By

Published : Oct 7, 2019, 8:28 PM IST

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்திவரும் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கங்களில் ஒன்று 'டால் கால்சா'.

பிரிட்டனில் செயல்பட்டுவரும் இந்த இயக்கத்தை நிறுவிய ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " பஞ்சாப் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து கொடும் சதித்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

போதைப் பொருள், ஆயுதங்களை பஞ்சாபுக்குள் கொண்டுவந்து அம்மாநில இளைஞர்களை பாகிஸ்தான் சீரழித்து வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து இந்திய அரசு குறித்து பேசிய அவர், "சமீபகாலமாக சீக்கியர்களுக்கு பலனளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

காலிஸ்தான் பேராளிகளை கருப்புப் பட்டியலில் (Black List) இருந்து நீக்கவேண்டும் எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துவருகிறோம். இந்த முயற்சியின் பலனாக ஒவ்வொருவராக இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்" என்றார் மகிழ்ச்சியோடு.

1980, 90-களில் காஸிஸ்தான் போராட்டத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளித்துவந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த போராட்டம் மறைந்துவிட்டது.

மீண்டும் காலிஸ்தான் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க : சீனா செல்கிறார் இம்ரான் கான்!

ABOUT THE AUTHOR

...view details